தொழிலாளர் பற்றாக்குறை.. போக்குவரத்துக் கழகங்களில் 2,877 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு.!
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய அளவிலான நடத்துனர், ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2,877 போக்குவரத்து ஊழியர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ், அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.
மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் டிஎன்எஸ்டிசி, எஸ்சிடிசி உள்ளிட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம் அதிவிரைவு போக்குவரத்து மற்றும் சொகுசு பேருந்து வசதிகளும் செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 2 கோடி மக்கள் இந்த போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் போக்குவரத்து கழகத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தல் நடைமுறைகள், புதிய பேருந்துகள் வாங்குவது, இலவச திட்டங்கள் வருவாய் இழப்பு, உள்ளிட்டவை காரணமாக தொழிலாளர்கள் நியமனம் தடைப்பட்டது. இதனால் கூடுதல் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து சேவை தடைபடும் சம்பவங்களும் நடைபெற்றன.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 30 லட்சம் முறை பேருந்து சேவை தடைப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 30,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கிறது எனவே அவற்றை நிரப்ப வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2800 போக்குவரத்து கழக காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஓட்டுனர், நடத்துனர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள், 537 தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 2877 காலி பணியிடங்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த பணிகளில் 37 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்களை மொத்தம் 769 காலி பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications