பொங்கல் தொகை + வெள்ள நிவாரணம்.. அள்ளித்தரப்போகும் அரசு.. ஸ்டாலின் பிளான்.. மக்களுக்கு விடிவுகாலம்
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் 1.12.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வு செய்தார்; அதனைத் தொடர்ந்து, 2.12.2023 அன்று சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, 3.12.2023 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நிவாரணம்; மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்தான் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி.. நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணமாக கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி.. பொங்கலுக்கு சிறப்பு பொருட்கள் ரேஷனில் வழங்கும் போது நிவாரணமும் வழங்க வாய்ப்புகள் உள்ளதாம். பொங்கலுக்கு அரசு வழங்கும் பணம் + நிவாரண தொகை சேர்த்து வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிகின்றன. கொரோனாவிற்கு பின் 4 ஆயிரம் கொடுத்தது போல இப்போது கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications