முத்து முத்தாக வந்த அறிவிப்பு! உங்க வங்கி கணக்கில்.. தமிழக அரசு அள்ளித்தரும் ரூ.4000! ஈசியாக பெறலாம்
சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000/- உதவித் தொகை என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து 2024-2025ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன. 01.01.2024 அன்று 58 அகவை நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்கான சான்று இருக்க வேண்டும் . தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு இருக்க வேண்டும். தமிழ்ப் பணிக்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
சான்றட்டை (ஆதார் கார்டு), குடும்ப அட்டை, மரபுரிமையர் அதாவது விண்ணப்பதாரர்களின் மனைவி/கணவன் இருப்பின் அவர்கள் சான்றட்டை (ஆதார் கார்டு) இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறை இணையத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்/உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024-க்குள் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு திட்டம்: மேற்கண்ட திட்டம் முழுக்க தமிழக அரசு திட்டம் ஆகும். இதேபோல் மத்திய அரசின் முக்கியமான ஒரு திட்டமும் உள்ளது. மத்திய அரசு மாதம் மாதம் ரூ. 5000 வழங்கும் அந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளன. இதன் புதிய பயனாளிகள் வரும் மாதங்களில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் முதுமை காலத்தில் மாதம் ரூ.5000 செலுத்தும் திட்டமாகும் இது . அதுவும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில் வங்கி கணக்கிலேயே இந்த நிதி செலுத்தப்படும். இது என்ன திட்டம்.. இதில் எப்படி சேரலாம் என்று பார்க்கலாம்.
அந்த திட்டத்தின் பெயர் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் ஆகும். இது வருமான வரி செலுத்தாத 18-40 வயதுக்குட்பட்ட சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவருக்கு முதியோர் வருமான பாதுகாப்புத் திட்டமாகும். அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களின் நீண்ட ஆயுட்கால அபாயங்களை நிவர்த்தி செய்வதில் இத்திட்டம் உதவுகிறது மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக தானாக முன்வந்து சேமிக்க ஊக்குவிக்கிறது.
APY திட்டத்தின் நோக்கம்: இத்திட்டம் முக்கியமாக ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது.
முக்கிய தகவல்: 60 ஆண்டுகளுக்கு முன் சந்தாதாரர் இறந்தால், சந்தாதாரரின் APY கணக்கில் பங்களிப்பைத் தொடர சந்தாதாரரின் மனைவிக்கு விருப்பம் இருக்கும பட்சத்தில் தொடரலாம். இது மீதமுள்ள காலத்துக்குத் துணைவரின் பெயரில் பராமரிக்கப்படும். சந்தாதாரர் 60 வயதை எட்டியிருப்பார். சந்தாதாரரின் மனைவி இறக்கும் வரை சந்தாதாரரின் அதே ஓய்வூதியத் தொகையைப் பெற சந்தாதாரரின் மனைவிக்கும் உரிமை உண்டு. இல்லையென்றால் திட்டத்தை நிறுத்திவிட்டு மனைவி திட்டத்தின் பலன்களை பெற தொடங்கலாம்.
APY இன் கீழ் கட்டணங்கள் மற்றும் வட்டி: APY இன் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு தொகையை செலுத்தாத அல்லது தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விதிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் மற்றும் அவற்றின் விண்ணப்ப முறை ஆகியவை மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அவ்வப்போது PFRDA ஆல் பரிந்துரைக்கப்படும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications