யோசிக்க முடியாத முடிவு! ரேஷன் கடைகள் எல்லாம் அடியோடு மாறுது! ஸ்டாலின் வெளியிட்ட மெகா அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான பல அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. முக்கியமாக ரேஷன் கடைகளை நவீனமாக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Tamil Nadu Government Notification ration

விவசாயிகளுக்கு ஒன்றரை இலட்சத்திற்கும் மேலாக இலவச விவசாய மின் இணைப்புகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று ரேஷன் தொடர்பான முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

நியாயவிலை கடைகள் அறிவிப்பு: அதன்படி, ரூ. 5 கோடி மதிப்பீட்டில்
அமுதம் நியாய விலைக் கடைகள் மேம்பாடு செய்யப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், பதினோரு மண்டலங்களில் செயல்படும் 100 அமுதம் நியாய விலை அங்காடிகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்படும். அங்காடி ஒன்றிற்கு ரூபாய் 5 லட்சம் வீதம் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு). திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி. கிருஷ்ணகிரி, நாமக்கல். நீலகிரி. சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த பணிகள் செய்யப்படும். பொது விநியோகத் திட்ட நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குதவற்காக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் பொலிவூட்டப்படும்.

சுத்திகரிப்பு; ரூ.7 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மண்டலம் அம்மன்பேட்டை,
திருவாரூர் மண்டலம் சுந்தரக்கோட்டை,
மயிலாடுதுறை மண்டலத்தில் எருக்கூர்-II மற்றும் சித்தர்காடு,
கடலூர் மண்டலத்தில் நெய்வேலி,
சிவகங்கை மண்டலத்தில் மானாமதுரை
நவீன அரிசி ஆலைகளில் அதி நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுச் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.

இது போக ரூ.22.30 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்குக் கட்டடங்கள் புனரமைப்பு செய்யப்படும். 9 சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் உள்ள 53 கிடங்கு கட்டடங்களின் மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள், மின்சாரப் பணிகள், சாலைகள், சேமிப்புக் கிடங்கு அலுவலக கட்டடங்கள், சுமைதூக்குவோர் தங்கும் வசதிகள் போன்ற கட்டமைப்புகளுடன் புனரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சரி செய்யப்படும்: ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில் புதிய வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகங்கள் சரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
• ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட வளாகம்.
• ரூ. 13.90 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் 6000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு வளாகம்.
• ரூ. 11.10 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் 5000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு வளாகம் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+