தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! காத்திருப்பு பட்டியலில் உதயசந்திரன்!
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் நிதித் துறை கூடுதல் செயலாளராக இருந்த உதயசந்திரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அது போல் வருவாய் துறை நிர்வாக ஆணையராக முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமுதாவிடம் கூடுதலாக இருந்த நிலையில் அந்த பொறுப்பிலிருந்து அமுதா விடுவிக்கப்பட்டுள்ளார். நிதித் துறை செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா கழக முதன்மை செயலாளராக சுவர்ணாவும் முதல்வரின் கூடுதல் செயலாளராக விஷ்ணுவும், முதல்வரின் 3ஆவது செயலாளராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
நிதித்துறை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த எம்.ஏ. சித்திக், IAS, தற்போது அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் நிதி நிர்வாகத்தில் மிக முக்கிய அதிகாரியாகப் பார்க்கப்பட்ட த. உதயச்சந்திரன், IAS அவர்களுக்குப் பதிலாக எம்.ஏ. சித்திக் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
டாஸ்மாக் : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த கி. நந்தகுமார், IAS, டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக (Managing Director) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வி. கிறிஸ்துராஜ், IAS அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.
வருவாய் நிர்வாகம்: விடுப்பு முடிந்து திரும்பிய திரு. ந. முருகானந்தம், IAS, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக / ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை: ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த முனைவர் ச. சுவர்ணா, IAS, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்வராக பதவியேற்ற விஜய், பல்வேறு அதிகாரிகளை மாற்றி வருகிறார். அந்த வகையில் முதல்வரின் முதன்மை செயலாளராக செந்தில் குமாரும் செயலாளர்-2 ஆக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications