நாளை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! அதிரடியாக அறிவித்த தமிழக அரசு! பந்துக்கு திமுக முழு ஆதரவு!
சென்னை: தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் ஆளும் கட்சியான திமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வியாழக்கிழமை நாடு தழுவிய அளவில் செயல்படும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாமல், வங்கி ஊழியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பாதுகாப்புத் தளவாடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பிப்ரவரி 12 அன்று நடைபெறும் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என வாடிக்கையாளர்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, எஸ்பிஐ, ஐடிபிஐ உள்ளிட்ட முக்கிய வங்கிகள் தொழிற்சங்கங்களிடமிருந்து முறையான வேலைநிறுத்த அறிவிப்புகளை பெற்றுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்த நாளை பொது விடுமுறை என அறிவிக்கவில்லை. வங்கி கிளைகள் திறந்திருக்கும் என கூறப்பட்டாலும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பண பரிவர்த்தனை, காசோலை தீர்வு, டிராஃப்ட் வழங்கல் போன்ற சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே பணிகள் முடித்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
தொழிலாளர் சட்ட திருத்தம்
இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. தொழிற்சங்க பதிவு கடினமாகும், நிர்வாகத்துக்கு அதிக அதிகாரம் கிடைக்கும், வேலைநிலைத்தன்மை குறையும் என்ற அச்சமும் தொழிற்சங்கங்களிடம் உள்ளது.
வங்கி ஊழியர் போராட்டம்
மேலும், வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக வாரத்திற்கு ஐந்து நாள் வேலை முறையை (சனி, ஞாயிறு விடுமுறை) கோரிவருகின்றனர். அதிகரித்து வரும் பணிச்சுமை, மன அழுத்தம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை, சம்பள முரண்பாடுகள் ஆகியவை வேலைநிறுத்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நோ வொர்க் நோ பே
"அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. இதனால் நாளை அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது கட்டாயம்; வராதவர்களுக்கு 'நோ வொர்க் - நோ பே' விதி அமல்படுத்தப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆதரவு
இதனால், ஒருபுறம் தொழிற்சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், மறுபுறம் மாநில அரசுகள் நிர்வாக சேவைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற நோக்கில் எச்சரிக்கை விடுத்துள்ள சூழல் உருவாகியுள்ளது. ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் ஆளும் கட்சியான திமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications