கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளை மட்டும் வாபஸ் பெறுகிறார்கள்.. ஹைகோர்ட்டில் திமுக வாதம்
சென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளை மட்டும் தமிழக அரசு வாபஸ் பெறுவதாக திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அதிமுக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்கட்சித் தலைவர்கள் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, மு.க.அழகிரி, செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி சதீஷ் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை மட்டும் தமிழக அரசு வாபஸ் பெறுவதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இந்த வழக்குகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications