நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி முதல் தங்கம் தென்னரசு வரை 6 பேரின் இலாகாக்கள் மாற்றம்
சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கோரி அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் தமிழக அமைச்சரவை நாளை மாலை 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் நிலையில் புதிதாக 4 பேர் அமைச்சரவையில் இணைய உள்ளனர். அதேவேளையில் பொன்முடி, தங்கம் தென்னரசு உள்பட 6 பேரின் இலாக்காள் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் உள்பட மொத்தம் 35 பேர் இடம் பெறலாம். தற்போது தமிழக அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளது. காலியிடம் எதுவும் இல்லை.

இதனால் புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றால் தற்போது உள்ள ஒருவரை நீக்க செய்ய வேண்டும். இத்தகைய சூழலில் தான் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவார் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதுபற்றி வெளிப்படையாக முதல்வர் ஸ்டாலின் எதுவும் கூறாத நிலையில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் அவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய அமைச்சரவையில் இருந்து 2 முதல் 3 பேர் நீக்கம் செய்யப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதவிர உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர், செந்தில் பாலாஜி, கோவி செழியன், சேலம் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு முழுவீச்சில் அரசு தயாராகி உள்ளது.
அதாவது தமிழக அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பாக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக அமைச்சரவை மாற்றம், இலாக்கா மாற்றம் ஆளுநரின் ஒப்புதலுடன் தான் நடக்கும். மேலும் அமைச்சராக பொறுப்பேற்போருக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் தான் நடத்தி வைப்பார்.
அந்த வகையில் தான் தற்போது தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் கோரி தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி இன்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். இதனால் அந்த கடிதம் என்பது கிடப்பில் உள்ளது. மதுரையில் இருந்து இன்று இரவு ஆளுநர் ஆர்என் ரவி சென்னை வருகிறார். அதன்பிறகு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அந்த கடிதத்தை பரிசீலனை செய்ய உள்ளார்.
இதனால் அமைச்சரவை மாற்றம் தொடர்பான முக்கிய அறிவிப்பு என்பது இன்று இரவு அல்லது நாளை காலையில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியானது. அதன்படி தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி பொன்முடியின் இலாக்கா என்பது உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பொன்முடி நாளை முதல் வனத்துறை அமைச்சராக செயல்பட உள்ளார். அதேபோல் அமைச்சர் மெய்யநாதன் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக உள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பிரிவின் அமைச்சராக செயல்பட உள்ளார். மேலும் கயல்விழி செல்வராஜ் தற்போது ஆதிதிராாவிடர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பதில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட உள்ளார்.
மேலும் மதிவேந்தன் தற்போது வனத்துறை அமைச்சராக உள்ளார். இவர் நாளை முதல் ஆதிதிராவிடர் துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவர் பால்வளத்துறை அமைச்சராக நாளை முதல் செயல்பட உள்ளார். அதேபோல் கைத்தறி மற்றமு் கிராம தொழில்துறை பிரிவையும் ராஜகண்ணப்பன் நிர்வகிக்க உள்ளார்.
அதேபோல் தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் நிதித்துறையுடன் சேர்த்து சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை பொறுப்பையும் ஏற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications