தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின கண்காட்சி- ஆளுநர் ரவி திறந்து வைத்தார்- மாணவர்களுக்கு அனுமதி!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த தேசப் பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தின புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், தேசப் பிரிவினைக் கொடூரங்களை விளக்கும் காணொளியையும் ஆளுநர் ரவி வெளியிட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியால் இன்று திறந்து வைக்கப்பட்ட கண்காட்சியில், தேசப் பிரிவினைக் கொடூரங்களை ஆவணப்படுத்தும் வரலாற்றுப் புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், தேசப் பிரிவினை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்களின் இடப்பெயர்வால் அவர்கள் சந்தித்த சொல்லிலடங்கா துயரங்கள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தேசப் பிரிவினையின் போது பிரிட்டிஷ் அரசு தீர்வை ஏற்படுத்தும் நடுவராக அல்லாமல் ஒரு மத்தியஸ்தராகவே செயல்பட்டதைக் கூறும் செய்தி, வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் 1947-ம் ஆண்டு ஜூன் 04-ஆம் தேதி அன்று புதுதில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியது, வன்முறை மற்றும் சூறையாடலால் பல இடங்கள் இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்கு ஒப்பாக பாதிக்கப்பட்ட காட்சிகள் என பத்திரிகைகள் வெளியிட்டிருந்த செய்திகளும், புகைப்படங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ரயில்களிலும், கப்பல்களிலும் ஏறுவதற்காக போராடிய மக்கள் வெள்ளத்தின் புகைப்படங்கள், ரயில்களில் இடம் கிடைக்காமல் ரயில் பாதைகளில் மக்கள் கால்நடையாக, குழந்தைகளை தோள்களில் சுமந்து செல்லும் பெற்றோர், வயதான பெற்றோரை தொட்டில் கட்டி சுமந்து சென்ற பிள்ளைகளின் புகைப்படங்கள் என பிரிவினைத் துயரங்களை காட்சிப்படுத்தும் பல வகையான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இக்கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்கள் அனைத்தும், அந்தக் கொடுந்துயரை இன்றும் நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருந்தது.
தேசப் பிரிவினைக்கான எல்லைகளை வகுப்பதற்கு நியமிக்கப்பட்ட சர் ராட்க்ளிஃப், அதற்கு முன்பு இந்தியாவுக்கு வந்ததேயில்லை என்ற தகவலும், பிரிவினை தொடர்பான சிக்கல்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் அடங்கிய செய்திகளும் புகைப்படங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷமாக இந்த புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் கிர்லோஷ் குமார், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் லீலா மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில், இன்று ஒரு நாள் மட்டும் நடைபெற்ற இந்தக் கண்காட்சியைப் பார்வையிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முன்னதாக தமது எக்ஸ் பக்கத்தில் தேசப் பிரிவினை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டிருந்ததாவது: 14 ஆகஸ்ட், 1947ஆம் ஆண்டில் நடந்த கொடுமைகளை, பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கும் இந்நாளில், முஸ்லிம்களுக்கு என ஒரு சொந்த நாடு தேவை என அகில இந்திய முஸ்லிம் லீக் கடுமையாக நிர்பந்தித்ததன் விளைவால் பாரதம் பிளவுபடுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வேரறுத்து அகதிகளாக்கப்பட்ட ஒன்றரை கோடிக்கும் அதிகமான அப்பாவி இந்தியர்களையும், கொல்லப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களையும், பல லட்சம் இந்திய சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தியும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் வேறு மதத்துக்கு மாற்றியும் நடந்த கொடுமைகளை நினைவுகூர்வோம்.
பிற மதங்களுக்கு எதிரான இந்த வன்முறை சகிப்புத்தன்மையற்ற நச்சு சித்தாந்தம், பல்லாயிரம் ஆண்டுகளாக உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாகரிக நாடாக விளங்கும் பாரதத்தின் சிந்தனைக்கு முரணானது.
இனம், மதம், பிரதேசம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் குழப்பங்களையும் சமூக பதற்றங்களையும் உருவாக்க முயலும் சில பாரத எதிர்ப்பு சக்திகளால் தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் கூட, 'அனைவரையும் உள்ளடக்கிய பாரதம்' என்ற எண்ணத்தின் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து, பாரதத்தின் ஆன்மாவாகிய முழுமையான சமூக நல்லிணக்கத்தைப் பேணி வாழ வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பதிவிட்டிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications