நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பிய நிலையில்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
சென்னை: தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா
பாஜக தவிர அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதற்கிடையே நேற்று தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் மாளிகை அதில் குறிப்பிட்டுளள்து. தமிழக ஆளுநர் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் அவரை மத்திய அரசு திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. வருகிற 6-ம் தேதி டெல்லி செல்லும் ஆர்என் ரவி 9-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோக இந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.

யாரை சந்திக்க போகிறார்?
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதுவும் 3 நாள் டெல்லியில் இருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பேச சென்றுள்ளாரா? பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications