ஜாபர் சாதிக் பற்றி எதையும் பேசல.. செய்தியாளர் சந்திப்பை சிம்பிளாக முடித்துக்கொண்ட ஆளுநர் ரவி
சென்னை: சர்வதேச மகளிர் தினமான இன்று, அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்கினார். போதை பொருள் விவகாரம் தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எதையும் பேசவில்லை.
டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் காவல்துறையினர் அவரை தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.

ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்களின் விபரங்களை வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல ஜாபர் சாதிக், அடிக்கடி கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 17-ம் தேதிக்கு முன்பாக ஜாபர் சாதிக், கென்யாவுக்கு சென்று வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த தேதியில் ஜாபர் சாதிக் உடன் கென்யா சென்ற நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கென்யா நாட்டுக்கு போதைப் பொருள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக சென்றார்களா என்ற கோணத்திலும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திமுகவில் அங்கம் வகித்த முக்கிய பிரமுகர் பெரும் சர்ச்சைக்குரிய வழக்கில் சிக்கியிருப்பது பாஜகவுக்கு கண்ட்டென்ட் எடுத்து கொடுத்திருக்கிறது. இந்த விவாகரத்தில் திமுகவையும், தமிழக அரசையும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சந்திப்பில் ஜாபர் சாதிக் குறித்த பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து எதையும் அவர் பேசவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications