புத்தாண்டு வாழ்த்திலும் வந்த சனாதனம்.. ஆளுநர் ஆர்என் ரவி சொன்ன அந்த வார்த்தை.. கவனீச்சிங்களா!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023ல் இந்தியாவில் நடந்த மாற்றங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டு உள்ளோடு சனாதனம் பற்றியும் தெரிவித்து புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
2023ம் ஆண்டு இன்றுடன் விடைப்பெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2024ம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை ஒவ்வொரு நாடுகளும் வரவேற்று வருகின்றன. இந்தியாவில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தலைவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளனர்.
அந்த வரிசையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சனதான தர்மம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசி வருவதற்கும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் புத்தாண்டு வாழ்த்து செய்தியிலும் ஆளுநர் ஆர்என் ரவி சனாதனத்தை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி.. சென்னையில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு.. .. போலீஸ் அதிரடி
2023ஆம் ஆண்டு, விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது, ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்பு பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.
சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட போறீங்களா! இத படிங்க முதல்ல.. மேஜர் அட்வைஸ் - 18000 போலீஸ் குவிப்பு
நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசார ஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.
இன்று விடைபெறும் 2023.. 2024 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு எது தெரியுமா? கடைசி நாடு இதுதான்
அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-இல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். 'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications