ஆளுநர் மட்டும் இல்லன்னா.. எங்க உத்தரவுபடியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! லோக் பவன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரின் உத்தரவின் பேரிலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை நடந்தது.

Tamil Nadu Governor

இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இதை வைத்து மே 8-ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் இதுவரை முதல்வராக யாரும் பதவியேற்கவில்லை.

பொதுவாக தேர்தல் முடிவுகளை வெளியிட முதல்வர் அல்லது பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியமாம். இதனால் மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மே 8 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 95.20 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் ஆளுநர் உத்தரவின்பேரிலேயே வெளியிடப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய அமைச்சர் பொறுப்பேற்பு தாமதமாவதால் தேர்தல் முடிவுகள் தாமதமாகின.

இது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆளுநர் கருதினார். எனவே எக்காரணத்தை கொண்டும் மாணவர்களின் வளர்ச்சிக்கான தேர்தல் முடிவுகளை ஒத்தி வைக்கக் கூடாது. எனவே திட்டமிட்டபடி இன்றே தேர்தல் முடிவுகளை வெளியிடுங்கள் என ஆளுநர் உத்தரவிட்டார்" என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+