3.60 லட்சம் விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்த தமிழக அரசு.. கனமழை நிவாரணமாக ரூ.290 கோடி ஒதுக்கீடு!
சென்னை: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு ரூ.289 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.289.63 கோடியை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்குப் பருவ மழை நவம்பர் - டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி தவறிய மாதம் பெய்த பருவம் மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு ரூ.289.63 கோடி நிவரணத் தொகை ஒப்பளிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டது.

வேளாண்மைத் துறைக்கு தலையாய இடம் அளித்திடும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு என 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும். உழவர்களின் நலன் காக்கவும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அரசானது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.அந்த வகையில், வடகிழக்குப் பருவமழை நவம்பர் -டிசம்பர் 2024 மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் கலெக்டர்களிடமிருந்து நிவாரணத்தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
76,132 ஏக்கரும், இதன்படி, வேளாண் பயிர்கள் 4.90 லட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப் பயிர்கள் 5.66 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டது 61,601 என மொத்தம் கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக 289.63 கோடி ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவின்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254.38 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு 35.25 கோடி ரூபாயும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications