ரூ.10 கோடியில் மெரினா கலங்கரை விளக்கம் டூ தீவுத்திடல் வரை 'மெரினா பாரம்பரிய வழித்தடம்'!
சென்னை: ரூ.10 கோடி மதிப்பீட்டில் மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை 'மெரினா பாரம்பரிய வழித்தடம்' (Marina Heritage Corridor) மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

ரூ.20 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள் மின்-வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மையங்களாக மேம்படுத்தப்படும்.
சென்னைப் பெருநகர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி) அமைக்கப்படும்.
சென்னைப் பெருநகர் பகுதியில், வெள்ள நிகழ்வுகளின் போது அவசரகால நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும், வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும் வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் (Flood Control Map) தயாரிக்கப்படும்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை 'மெரினா பாரம்பரிய வழித்தடம்' (Marina Heritage Corridor) மேம்படுத்தப்படும்.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.
5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படும்.
முன்னதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள்: திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.1.30 கோடி செலவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) அமைக்கப்படும்.
ரூ.57.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் 10 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் அமைக்கப்படும்.
ரூ. 70.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications