பணி வாய்ப்பு.. ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு நல்ல செய்தி! பள்ளிக்கல்வித்துறை கேட்ட முக்கிய விவரம்
சென்னை: கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க பணிக்காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 58,000 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5.62 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க பணிக் காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பள்ளிக்கல்வித் துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார்.
இந்த துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31 ஆம் தேதி வரை உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் எவரின் பெயரும் விடுபடாதவாறு கையொப்பத்துடன் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள் அதற்கு முந்தைய மாதத்தில் உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்












Click it and Unblock the Notifications