பழசும் வேண்டாம்.. புதுசும் வேண்டாம்! “மாநில ஓய்வூதிய திட்டம்”.. ஐடியா கொடுக்கும் அரசு ஊழியர் சங்கம்!
சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், OPS, NPS, ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றின் சிறந்த அம்சங்களை இணைத்து, "மாநில ஓய்வூதிய திட்டம்" என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க சில சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) 2003 முதல் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (NPS) நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் சுமார் 6.24 லட்சம் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருந்தாலும், ஊழியர்கள் அதை ஏற்க மறுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் அரசு ஊழியர்கள்.

ககன்தீப்சிங் பேடி
இந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு ஊழியர் சங்கங்களிடம் பரிந்துரைகளை கேட்டு வருகிறது. அதற்கு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளது. அதாவது OPS, NPS, ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றின் சிறந்த அம்சங்களை இணைத்து, "மாநில ஓய்வூதிய திட்டம்" என்ற தற்காலிக தீர்வை அறிவிக்கலாம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பரிந்துரையின் முக்கிய அம்சங்கள்:
பணிக்கால அடிப்படை: 25 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்தால் முழு ஓய்வூதிய தகுதி; குறைவானவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கலாம்.
ஓய்வூதிய அளவு: 60 வயதில் ஓய்வு பெறும் போது கடைசி 12 மாத ஊதிய சராசரியில் 35% ஓய்வூதியம் வழங்கலாம். (OPS-இல் 50% இருந்தது.)
அதிகரிப்பு முறை: ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் 5% உயர்வு; இதனால் 75 வயதில் 50% ஊதியம் கிடைக்கும்.
பங்களிப்பு முறை: ஊழியர் ஊதியத்தின் 10%, அரசு - 20%, இது "கார்பஸ் பண்ட்" எனும் பொதுநிதியில் சேர்க்கப்படும். ஊழியரின் 10% பங்கு ஓய்வுக்குப் பிறகு வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்: 10 ஆண்டு பணிக்காலம் நிறைவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.10,000.
ஊதிய உயர்வுக்கு வயது அடிப்படை: 65 வயது - குறைந்தபட்ச ஓய்வூதியம், 70 வயது - அடிப்படை ஓய்வூதியத்தில் 40% கூடுதல்.
குடும்ப ஓய்வூதியம்: பணியாளர் ஓய்வூதியத்தில் 60% வழங்கப்படும்.
நிதி மேலாண்மை: "தமிழ்நாடு ஓய்வூதிய நிதி மேலாண்மை வாரியம்" அமைக்க வேண்டும். கருவூலத் துறை கணக்குத் துறை கமிஷனர் தலைமையில் செயல்பட வேண்டும். ஊழியர்-அரசு பங்களிப்புகள் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு, வீடு, வாகனம், தனிநபர் கடன்களாக வழங்கலாம்.
OPS-ஐ மீண்டும் கொண்டு வர அரசு தயக்கம் காட்டுவதற்குக் காரணம் அதிக நிதிச்சுமை. அதே நேரத்தில், NPS-இல் பணியாளர்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. இந்நிலையில் OPS, NPS, ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றின் சிறந்த அம்சங்களை இணைத்து, "மாநில ஓய்வூதிய திட்டம்" என்ற தற்காலிக தீர்வை அறிவிக்கலாம் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கு இது மத்திய-மாநிலம் இடையே சமநிலையை ஏற்படுத்தும் இடைக்கால முயற்சியாக பார்க்கப்படுகிறது. OPS-ஐ முழுமையாக கொண்டுவர முடியாவிட்டாலும், இந்த "மாநில ஓய்வூதியத் திட்டம்" குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ஒரு நிவாரணமாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications