மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்.. சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கிய தமிழக அரசு! கட்டுமானம் எப்போது முடியும்?
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு இப்போது சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த 2015இல் மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டு இடமும் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை எய்மஸ்: தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. பணிகள் விரைந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.. அதன் பிறகு பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இது அடுத்து நடந்த தேர்தல்களிலும் பேசுபொருள் ஆனது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.. 5 ஆண்டுக்கு பிறகு வேகமெடுக்கும் வேலை.. 2026ல் திறக்க முடிவு
இதற்கிடையே நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17 மாதம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. எல் அன்ட் டி நிறுவனம் இதற்கான டெண்டரை எடுத்தது. இருப்பினும், கட்டுமான பணிகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியைக் கிடைக்காததால் கட்டுமானம் உடனடியாக தொடங்கப்படவில்லை. இதற்கிடையே எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்தது.

அனுமதி: இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கையில் அடிப்படையில் அனுமதி தரலாம் என்று கடந்த மே 10ஆம் தேதி பரிந்துரை அளித்தது. மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது. இருப்பினும், கட்டுமானத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதியில் மண்ணை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்போது சுற்றுச்சுழல் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், விறுவிறுவென கட்டுமான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. 33 மாதங்களில் இந்த கட்டுமானம் முடிக்கப்படும் என எய்ம்ஸ் தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications