பள்ளிக்கரணையில் உயர்மட்ட மேம்பாலம்.. தென் சென்னைக்கே வரப்போகும் விடிவு... துரைப்பாக்கமும் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிகப்பெரிய போக்குவரத்து சிக்னலில் ஒன்றான காமட்சி மருத்துவமனை சிக்னலுக்கு விடிவுகாலம் பிறக்க போகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில் பள்ளிக்கரணையில் உள்ள காமாட்சி மருத்துவமனை மற்றும் துரைப்பாக்கம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தென்சென்னையில் இதைவிட டிராபிக் நெரிசல் உள்ள பகுதியை காட்டுபவர்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் என்பது போல் இருக்கிறது பள்ளிக்கரணை காமாட்சி சிக்னல்.. என்னை தாண்டி ஒரு எட்டு போயிடுவியா நீ என்பது போல் நிற்கும் காமாட்சி மருத்துவமனை சிக்னலை தாண்டாமல் தென்சென்னை பகுதி மக்களின் வாழ்க்கை ஒரு நாளும் கடக்க முடியாது. தாம்பரம் டூ வேளச்சேரி சாலையில் உள்ள காமாட்சி மருத்துவமனை மேம்பாலம் என்பது ஐடி காரிடர் சாலையில் உள்ள மேம்பாலம் ஆகும்.

chennai Pallikaranai

வேளச்சேரியின் நுழைவு வாயிலாகவும், ஓஎம்சாலை சாலை சந்திப்பை அடையும் இடமாகவும் பள்ளிக்கரணையின் அடையாளமாகவும், விமான நிலையம் செல்ல தென் சென்னைக்கு இதுதான் வழியாகவும் உள்ளது. பல லட்சம் பேர் வந்து செல்லும் இந்த சாலை காலை வேளையில் ஸ்தம்பித்தால் கிட்டத்தட்ட பாதி சென்னை அப்படியே முடங்கி போய்விடும். காலை மற்றும் மாலை எல்லா நேரமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகும்.

சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், மாம்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலை என எந்த சாலையில் வருபவர்களும் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சிக்னலை கடக்காமல் போக முடியாது. சென்னையின் மிக நீண்ட நேர சிக்னல்களில் ஒன்றான இதில் வாகனங்கள் மீண்டு வருவதற்குள் படாதபாடு படுகின்றன.

chennai Pallikaranai

சோழிங்கநல்லூரில் இருந்து கிண்டி செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். பள்ளிக்கரணையில் இருந்து ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் செல்லவே சில நேரங்களில் அரை மணி நேரம் முதல் 40 நிமிடம் வரை கூட ஆகும்.. அவ்வளவு தூரம் நெரிசல் ஏற்படும் பகுதியாகும். காலையிலும் மாலையிலும் வாகன ஓட்டிகள் நொந்து செல்லும் இடமாக உள்ளது.

இந்நிலையில் வேளச்சேரி பள்ளிக்கரணை, மேடவாக்கம், பல்லாவரம், துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்நல்லூர் போன்ற தென் சென்னை பகுதி மக்களுக்கு கமாட்சி மருத்துவமனை சிக்னலால் ஏற்பட்ட சிக்கலுக்கு விரைவில் தீர்வு வரப்போகிறது . பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில் பள்ளிக்கரணையில் உள்ள காமாட்சி மருத்துவமனை மற்றும் துரைப்பாக்கம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

chennai Pallikaranai

உயர்மட்ட பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வி.வேலு, துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்திற்கு நேற்று பதிலளித்து பேசியுள்ளார்.

தென்னிந்தியாவின் கடைசி இயற்கை ஈரநிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் , குறிப்பாக முந்தைய வெள்ளத்தின் போது பெருமளவு சேதத்தை சந்தித்திருக்கிறது. மாநில சதுப்பு நிலப் பணியின்படி, தென் சென்னையின் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவை வடிகட்டுவதால், இந்த சதுப்பு நிலம் சென்னைக்கே மிகவும் முக்கியமானது. இது ஒக்கியம் மடவு மற்றும் கோவளம் கால்வாய் வழியாக பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவை அடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+