முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. துணை முதல்வரின் துணை செயலராக ஆர்த்தி IAS நியமனம்!
சென்னை: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலராக சத்யபிரதா சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்த்தி ஐஏஎஸ், துணை முதல்வரின் துணைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறு, குறு தொழில் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆர்த்தி ஐ.ஏ.எஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications