தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்: வேலை நிறுத்தம் வாபஸ்.. ஏற்கப்பட்ட 3 கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவினை அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டிய பலரும் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஊருக்கு சென்றனர். பொதுவாக தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு அதிகமாக இருக்கும். 600 ரூபாய் என்றால் 1200 ரூபாயும். 1000 ரூபாய் என்றால் 2000 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். 750 ரூபாய் என்றால் 1500 என்கிற அளவில் கட்டணம் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் கட்டணம் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரில் தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த முறை அதிரடியாக சிறைபிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தனர்.
ஆம்னி பஸ் கட்டணம்: இன்றுடன் தொடர் விடுமுறை முடியும் நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இன்று காலை அறிவித்தது. இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருக்கிறோம்.
சிறைபிடிப்பு: ஆனால் கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிககட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கி கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின் படி சிறைபிடித்துள்ளனர்.
பேருந்துகள் இயங்காது: இதனை கண்டித்தும், மீண்டும் இவ்வாறு சிறைபிடிப்பதை நிறுத்த கோரியும் இன்று 24.10.2023 தேதி மாலை 6 மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும், 1 லட்சத்திற்கு மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் இந்த முடிவை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பொதுமக்கள் கவலை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்ப விரும்பிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தமிழக அரசு பேச்சுவார்த்தை: இந்த சூழலில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை இணை செயலாளர் முத்து உடன் தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் சந்தித்தனர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள பேருந்துகளில் ஆவணங்கள் சரியாக இருந்தால் நாளை விடுவிக்கப்படும் என்று அரசு தரப்பு அறிவித்தது. மேலும் தவறுதலாக பேருந்துகளை சிறைபிடிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் அரசு தரப்பில் ஏற்கப்பட்டது. மேலும் விதிமீறல் இருந்தாலும் நடுவழியில் பேருந்துகளை சிறைபிடிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் அரசு ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த 3 கோரிக்கையும் ஏற்கப்பட்டதால் ஆம்னி பஸ் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications