ஜிஎஸ்டி ஆல் 85 ஆயிரம் கோடி இழப்பு! Speaking for india’ இல் ஸ்டாலின் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் மிகப் பெரிய பலம், அது காலத்திற்கு ஏற்ற மாதிரி புதிது புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் எல்லாம் தன்னை இணைத்துக்கொள்வது.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

ஒரு காலத்தில் திமுகவின் கொள்கைகளைப் பேச 80 பத்திரிகைகள் இருந்தன. அச்சில் வந்த பத்திரிகைகளின் பத்திரிகைகளின் பட்டியல் இவை. அச்சில் வராத கையெழுத்து பத்திரிகைகள் பல. ஏன்? முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியே அவரது 'முரசொலி'யை முதலில் கையெழுத்து பத்திரிகையாகவே தொடங்கினார்.

அதன் இன்னொரு வடிவமான டிஜிட்டல் யுகத்தில், திமுக 75 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் என களத்தில் இறங்கிய திமுக, பின்னர் தனது பொதுக்கூட்டங்களைத் தொலைக்காட்சி களத்தைத் தாண்டி, யூடியூப்பில் லைவ் செய்து வருகிறது.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

அதற்கும் அடுத்தகட்டத்திற்கு இக்கட்சி தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. ட்விட்டர் ஸ்பேசில் கட்சித் தலைவர்களை வைத்துச் சொற்பொழிவுகள் நடத்தி வருகின்றது.

இப்போது தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுமைக்கும் ஸ்டாலின் பிராட் காஸ்ட் தொடங்கி, 'Speaking for india' என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதுவரை 3 எபிசோட்ஸ் வெளிவந்துவிட்டது. 2வது எபிசோட்டில் பாஜகவின் ஊழல் முகத்தை முன்வைத்துப் பேசினார். அது இந்தியா முழுவதும் பேசு பொருளானது.

இதில் ஹலைட்ஸ் என்னவென்றால், இந்தி, மலையாளம், இங்கிலீஷ் எனப் பல்வேறு மொழிகளில் பேச்சு சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது. ஆக, டெக்னாலஜிதான் இன்றைய இளைஞர்களின் சைக்காலஜி. அந்தத் துடிப்பான நாடியை இந்திய அளவில் முதலில் பிடித்துப் பார்த்துள்ள கட்சி திமுக.

இப்போது 3வது எபிசோட்டில் முதல்வர் ஸ்டாலின் மாநில சுயாட்சியை பாஜக எப்படி எல்லாம் பறிக்கிறது என்பதைப் பட்டியல் போட்டு அம்பலப்படுத்தி இருக்கிறார்.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

திமுகவின் 5 முக்கியமான கொள்கைகளை விளக்கிவிட்டு, அதில் 5வது கொள்கை பற்றி பெரிய பாடமே நடத்தி இருக்கிறார் ஸ்டாலின்.

3வது எபிசோட் 'Speaking for india' வில் ஸ்டாலின், "செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியான 2ஆவது எபிசோட்டில் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த 7 மெகா ஊழல்கள் பற்றிப் பேசியிருந்தார்.

அக்டோபர் 2வது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. பாஜக அரசின் ஊழல்களை வெளிகொண்டுவந்த சிஏஜி அதிகாரிகள் செப்டம்பர் 12 ஆம் தேதியே கூண்டோடு மாற்றப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வளவே வேகமாக ஆக்‌ஷன் எடுத்திருக்கிறார்கள்?

இந்த 3வது எபிசோட்டில் நான் பேசப் போவது மாநில உரிமைகள்!

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

திமுக தனிக்கென்று தனித்துவமான கொள்கைகளைக் கொண்ட கட்சி மட்டுமல்ல; அது 75வது ஆண்டுவிழாவையும் கொண்டாடிவரும் கட்சி மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் இன்று 3வது பெரிய கட்சியாக இருந்து, இந்திய ஜனநாயகத்தைக் காப்பற்ற போராடுகின்ற கட்சியாகவும் அது இருந்து வருகிறது.

திமுகவின் கொள்கைகளில் மிக முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா என்பதே கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.

நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் இருக்கின்றன. பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவர்களுக்கான உரிமைகளை அரசியல் சட்டம் தந்துள்ளது. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறோம்.

சுருக்கமாகச்சொல்ல வேண்டுமென்றால், இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான ஒரு பூந்தோட்டம். அதனால்தான், நம் நாட்டின் நிர்வாக அமைப்பு உருவாக்கியவர்கள், ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி கொண்ட, பல நெறிமுறைகள் கொண்ட பல்வேறு மாநிலங்கள் கூடிய ஒன்றியமாக நம் நாட்டை உருவாக்கினார்கள்.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பாக குஜராத் மாநில முதல்வராக இருந்தார். அப்போது எல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார்.

ஆனால், அவர் பிரதமராகி டெல்லிக்கு வந்ததற்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த முதல் வரி என்னவென்றால், india that is bharat, shall be a union of states.

ஒரு முதலமைச்சராக அன்று மாநில உரிமைகளைப் பேசிய அவர், இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி, மாநிலங்களை ஒழிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், அதை முனிசிபாலிடிகளாக மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கின்றது.

மோடி முதலமைச்சராக இருந்து பேசியதற்கும், பிரதமரானதும் செய்கின்ற செயலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டெல்லியை மையப்படுத்தாமல், மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால், மாநில அமைச்சர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கக் கூடிய 'திட்டக்குழு'வைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத 'நிதி ஆயோக்' அமைப்பை உருவாக்கினார். மாற்றுக்கட்சிகளைப் பழிவாங்க மாட்டேன் என்றார்.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

ஆனால் பாஜக என்ன செய்கிறது? எந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சிக்கு வரமுடியவில்லையோ, அங்குள்ள மாநிலக் கட்சிகளை 2 ஆக அல்லது 3 ஆக உடைத்து, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சி நடத்துகிறார்கள்.

இதில் முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார். கூட்டாட்சி கருத்தியலை ஆதரிக்கின்றவன் நான். டெல்லிக்குக் காவடி தூக்குகின்ற நிலைமையை மாற்றுவேன் என்றும் சொன்னார்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மாநில அரசு கொண்டுவரும் திட்டங்களை நிறைவேற்றக்கூட, ஒன்றிய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்ய, எல்லா மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்வோம் பாஜக தன் தேர்தல் அறிக்கையில் சொன்னது. கூடுதலாகப் பிரதமர் மோடி, மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார்.

ஆனால், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குகின்ற காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கையும் ஒழுக்காகப் பிரித்து அளிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜிஎஸ்டி முறையால் ஐசியுவில் உள்ளது.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

12வது நிதி ஆணையத்திலிருந்து நிதி ஒதுக்கீடு மிகக் குறைந்துவிட்டதால், கடந்த 19 ஆண்டுகளில் நம் தம்ழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தமிழ்நாட்டிற்கு இனிமேல் இழப்பு ஏற்பட இருக்கிறது.

அதைப்போன்று கிராமப்புற ஏழை, எளிய தாய்மார்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கின்ற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்லாமல்; வேலை செய்யும் தாய்மார்களுக்குச் சம்பளத்தைக்கூட ஒழுங்காக வாங்காமல் பாஜக ஆட்சி இழுத்தடிக்கிறது. இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமில்லை, எல்லா மாநிலங்களிலும் இதேதான் நிலைமை.

அனைத்திற்கும் மேலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் இப்போது என்ன சொல்லி இருக்கிறார் என்றால், அரசுத் திட்டங்களில் மோடி புகைப்படத்தை அச்சிடவில்லை என்றால் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவோம் என்கிறார்.

மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரங்களை தருவோம் என்று சொன்ன மோடி ஆட்சியின் உண்மை முகம் இதுதான்.

மாநிலங்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கவுன்சில் அமைப்போம் என்றும் சொன்னார்கள். இறுதியில் அந்த கவுன்சிலையும் முடக்கிவிட்டார்கள்.

ஆக, மாநிலங்களின் கருத்தைக் கேட்கவும் மனதில்லை, அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரங்களைக் கொண்டு செயல்பட மாநில அரசுகளை விடுவதும் இல்லை.

ஆளுநர் மாளிகையைக் கொண்டு மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு ஆக்‌ஷன் பிளான் ஆக வைத்துள்ளது பாஜக. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைத்த 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க, பாஜக ஆளுநரைப் பயன்படுத்துகின்றது. மாநிலங்களின் உரிமையையும் சட்டமன்றத்தின் மாண்பையும் எப்படி எல்லாம் சிறுமை செய்கிறார்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

Tamil Nadu has lost 85 thousand crores due to implementation of GST tax said MK Stalin

இப்படி படிப்படியாக, ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை, ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் என்ற கொள்கையை நோக்கி நாட்டை நகர்த்த முயற்சி செய்கின்றார்கள்.

ஆக மொத்தத்தில் இந்தப் பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் அளித்துள்ள கூட்டாட்சி கருத்தியல், ஜனநாயகம் போன்றவை மக்களுடன் சேர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

இதில் மோசமான விசயம் என்னவென்றால், மாநிலக் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடிவருவதுதான். தேசியக் கல்விக் கொள்கை என்ற வடிவில் மாநில அடையாளங்களை அழிக்கிறார்கள். இத்தனைக் கொடுமைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உள்ள ஒரே கவசம் மாநில சுயாட்சிதான்.

1974 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, நாட்டுக்கே முன்னோடியாக மாநில உரிகளுக்கு வலுசேர்க்க ராஜமன்னார் குழுவை அமைத்தார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளைச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானமாகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அதில் மாநில சுயாட்சியைக் கொண்டுவர இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பேரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்தத் தீர்மானத்தைச் சட்டமன்றத்திலும் மேலவையிலும் நிறைவேற்றினார். அதை ஏற்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 'These are important issues and we intend to consult all the Chief Ministers' எனச் சொன்னார்.

அந்தத் தருணத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றார். அதைக் காஷ்மீரிலிருந்த ஷேக் அப்துல்லா, மேற்குவங்கத்திலிருந்த ஜோதிபாசும் எதிரொலித்தனர்.

இன்றைக்கு ஆட்சிக்காலத்தில் கடைசிக் கட்டத்தில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் இன் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. அதனால்தான் பாஜக அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் ஆட்சியை நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை.

மாநில உரிமைகள் செழிக்க வேண்டும் என்றால், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்று நீண்ட உரையை ஆற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+