'20'20'ன் கடைசி நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா? பாசிட்டிவ் மாற்றம்
சென்னை: 2020ம் ஆண்டின் கடைசி நாளானா இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட குறைவு ஆகும். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,18,014 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 8,501 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2020 மார்ச்சில் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டின் இறுதி நாளான பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 7000 வரை உயர்ந்த கொரோனா இன்று ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. பல மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 20க்கும் கீழாகவே உள்ளது.

சென்னை உள்பட எல்லா மாவட்டங்களுமே கொரோனாவால் இப்போது பெரிய அளவில் பாதிக்கப்படுவது இல்லை. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,18,014 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,501பேர் மட்டுமே சிசிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று கொரோனா தொற்றால் 17 பேர் பலியாகிய நிலையில் இன்று அதைவிட குறைவாக 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,122 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 1,038 பேர் மீண்டனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,97,391 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 259 பேர், கோவையில் 89 பேர், செங்கல்பட்டில் 53 பேர், திருவள்ளூரில் 41 பேர், திருப்பூரில் 36 பேர், ஈரோட்டில் 42 பேர், காஞ்சிபுரத்தில் 25 பேர், சேலத்தில் 38 பேர், திருச்சியில் 22 பேர் மற்றும் மதுரையில் 14 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில்இருந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 44 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications