மொத்தம் 21 கி.மீ.. கருணாநிதி நினைவிடம் வரை உற்சாகமாக ஓடிய மா.சு.. அப்படியே வியந்து போன சென்னை.. செம
சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21 கி.மீ மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அசத்தியுள்ளார். மா.சுப்பிரமணியன் அரசியல் செயல்பாடுகள் மட்டுமின்றி உடற்பயிற்சி, ஃபிட்னெஸ் போன்ற விஷயங்களிலும் சிறந்து விளங்குபவர் ஆவார்.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.
இந்த கொரோனா காலத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணியில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தினார் மா.சுப்பிரமணியன்.

மாரத்தான் போட்டி
இதன் பயனாக தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அடியோடு சரிந்து விட்டது. இந்த முக்கியமான பொறுப்புக்கு இடையிலும் தான் மிகவும் நேசிக்கும் மாரத்தானிலும் மா.சுப்பிரமணியன் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 21 கி.மீ மாரத்தான் போட்டியில் பங்கேற்று அசத்தியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

21 கி.மீ ஓடினார்
சென்னையில் மெய்நிகர் திரை மாரத்தான் போட்டி நடந்தது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன் 21 கி.மீ தொலைவுக்கு ஓடிச்சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவு செய்தார். கொரோனா விழிப்புணர்வு செய்வதற்காக இந்த மாரத்தான் போட்டி நடந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
இதில் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருவதால் பொதுவெளியில் மாரத்தான் போட்டி நடைபெறவில்லை. இது லண்டன் நகரம் நடத்துகிற மெய்நிகர் மாரத்தான் ஆகும். இளைஞர்களிடம் உடற்பயிற்சி விழிப்புணர்வு செய்யும் நோக்கில் இந்த போட்டியை நிறைவு செய்துள்ளோம்.

முக்கியத்துவம் அளிக்கப்படும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோயும் நம்மை அண்டாது. கடுமையான அரசு பணிகள் இருந்ததால் என்னால் மாரத்தான் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. கடந்த 10 நாட்களாக மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறேன். தமிழ்நாட்டில் மாரத்தான் போட்டிகளுக்கு அரசுமுக்கியத்துவம் கொடுக்கும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து தனது , ஃபிட்னெசில் கவனம் செலுத்தி அனைத்து தரப்பினருக்கும் ஊக்கம் கொடுத்து வரும் மா.சுப்பிரமணியனுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications