Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்பத்திரிகளில் ஒரு பக்கம் கொள்ளை.. மறுபக்கம் தாக்குதல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கொரோனா பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீதும் -தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மீதும் -நோயாளிகள் இறக்க நேரிடும்போது தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

Recommended Video

    Ma Subramanian அதிரடி! Private Hospitals அதிக கட்டணம் வசூலிக்க கூடாது | Oneindia Tamil

    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொரனாத் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம்முயிரை துச்சமென மதித்து அரும்பணி ஆற்றி வருகின்றனர்.

    அரசுத் துறையிலும் , தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும், தமிழக அரசு தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

    நிவாரணம்

    நிவாரணம்


    இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும் , பணிபுரிந்து வரும் அவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள் மீது தாக்குதல்

    மருத்துவர்கள் மீது தாக்குதல்

    இந்த நிலையில் சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும் போது தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. மருத்துவமனைகளில் உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க இயலாததாகிறது. இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது, அவர்கள் ஆட்சி வரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காப்பீட்டு பயனாளிகள்

    காப்பீட்டு பயனாளிகள்

    மேற்கூறியவாறு மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்து வரும் நிலையில், சில மருத்துவமனைகளில் பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காமல் அவரிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.

    தமிழக அரசு தயங்காது

    தமிழக அரசு தயங்காது

    மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்க கூடிய அதே நேரத்தில் , பெருமக்களிடம் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும், நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது. தமிழ்நாடு மருத்து நிறுவனங்கள் ( முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி , இந்த மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தெரிவித்துக்கொள்கிறேன் " இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+