அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி!
சென்னை: தேசிய அளவில், மகப்பேறு இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தீர்வு காண, அம்மாநில திட்டக் குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் குழுவினர் விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இன்று மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர்.

உத்தரப் பிரதேச குழுவினர்
மகப்பேறு இறப்பு என்பது வட மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்கு பிரசவிக்கும் 1 லட்சம் தாய்மார்களில், 140 என இறப்பு விகிதம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இறப்பு விகிதம் 35-40 என இருக்கிறது. எனவேதான், உத்தரப் பிரதேசத்தின் மாநில உருமாற்ற ஆணையத்தின் (STC) தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான உயர்மட்ட குழு சென்னைக்கு வந்திருக்கிறது.
இக்குழுவினர், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய சுகாதார திட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த குழுவினருக்கு, தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம், 2005 முதல் தமிழகம் பின்பற்றி வரும் திட்டங்களை அவர்களுக்கு விளக்கினார்.
தமிழகம் பகிர்ந்துகொண்ட வெற்றியின் ரகசியம்
MMR வார் ரூம்: தாய்மார்கள் இறப்பைக் கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை.
மாவட்ட அளவிலான தணிக்கை: ஒவ்வொரு இறப்பு குறித்தும் மாவட்ட அளவில் ஆய்வு செய்து காரணங்களைக் கண்டறிதல்.
சுமன் மையங்கள்: உயர்தர சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல்.
அதி-அபாயப் பகுதிகள்: கர்ப்ப காலத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ள பெண்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்துதல்
விருதுநகர்தான் டார்கெட்
இதனையடுத்து இக்குழுவினர் இன்று மதுரை மற்றும் விருதுநகரில் நேரடி கள ஆய்வை மேற்கொள்கின்றனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமான ஆய்வை மேற்கொள்கின்றனர். ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, 2024 ஏப்ரல் மாதம் வரை, இந்த மாவட்டத்தில் ஒரேயொரு மகப்பேறு இறப்பு கூட பதிவாகவில்லை. இது மிகப்பெரிய சாதனை. இது சாத்தியமானது எப்படி? என்பது குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
முதலமைச்சர் வரவேற்பு
இக்குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, "ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் #DravidianModel நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!" என்று கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சால்மன் மீன் வாங்கறீங்களா? மூளைக்கு ஒமேகா 3 பவர் உயருமே.. இந்த ஆரஞ்சு கலர் மீனால் உடல் எடை குறையுமா -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications