கீழ ஊத்துறதுக்கு என் கிட்டயாவது கொடுங்கப்பா.. மதுபிரியர் செய்த கலாட்டா.. பாஜக போரட்டத்தில் காமெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் நேற்று கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வாய்க்காலில் கொட்டி பாஜகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு மதுபிரியர் செய்த கலாட்டா அனைவரையும் சிரிப்படைய வைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள் குடித்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

weird trend bjp liquor kallakurichi liquor death tamil nadu

கள்ளக்குறிச்சி சம்பவம்: இதில் பலரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தையே இந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மெத்தன போக்கே இந்த துரதிர்ஷ்ட சம்பவங்கள் தொடர காரணம் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளன.

பாஜக போராட்டம்: கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்: சட்டமன்றத்திலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடந்த இரு தினங்களாக அமளியில் ஈடுபட்டதோடு, வெளிநடப்பு செய்து வருகிறது. தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுக்க நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

எச் ராஜா கைது: மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். இதையடுத்து எச் ராஜா உள்பட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்றாடிய மது பிரியர்: ரயில் நிலைய சாலை அருகே ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் கடை ஒன்றில் மது பாட்டில்களை வாங்கிய பாஜகவினர் மதுவை கீழே ஊற்றி தங்கள் எதிர்ப்பை காட்டினர். அப்போது அங்கு இருந்த மது பிரியர் ஒருவர், மதுவை கீழே கொட்டுவதை பார்த்து பதறியடி ஓடிவந்தார். வீணாக கீழே கொட்டுவதற்கு பதிலாக மதுவை என்னிடம் தாருங்கள் என பாஜகவினரிடம் மன்றாடினார்.

கட்டிங் கொடுத்த பாஜகவினர்: இது என்னடா புது பிரச்சினையா போச்சு.. என சிரித்துக் கொண்ட பாஜகவினர்.. மது பிரியருக்கு ஒரு கட்டிங்கை கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகே மதுவை வாங்கிக் கொண்டு அந்த மதுபிரியர் அங்கிருந்து கிளம்பி சென்றார். மதுவை கீழே கொட்ட விடாமல் மதுபிரியர் செய்த அலப்பறை அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.

கள்ளச் சாராயம் குடித்து 57 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மது அழிக்கும் போராட்டத்தின் போது மது பிரியர் கட்டிங் கேட்டு மன்றாடிய சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+