தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி மாற்றம்.. புதிய ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாடு உளவுத்துறைக்கு புதிய ஐஜியை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக உளவுத்துறை ஐஜியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில் வேலன் மாற்றப்பட்டு, புதிய உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலைக்குள் அவினாஷ் குமார் தமிழ்நாடு புதிய உளவுத்துறை ஐஜியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications