சிங்கப்பாதை! அடித்து தூக்கும் ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் இன்னும் சர்வதேச நிறுவனம் "மெகா" முதலீடு.. செம
சென்னை: ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் இன்று தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கிருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வர முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாக ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் இன்று தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் நிலையில்தான் தற்போது இந்த முதலீடும் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
குவியும் முதலீடுகள்: கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது.

2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட கூட்டம்: இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது.
மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக 99 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாக 93 நிறுவனங்கள் முதலீடுகளையும், திட்டங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இன்று மேற்கொண்டு உள்ளன. இந்த முதலீடு செய்த நிறுவனங்கள் பல தங்கள் தொழில்களை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இன்னும் சில நிறுவனங்கள் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகளை முடித்துவிட்டன.












Click it and Unblock the Notifications