தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல.. பட்ஜெட்டில் உண்மையை போட்டுடைத்த பி.டி.ஆர்.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின்போது கூறி இருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தங்களது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் பட்ஜெட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் பி.டி.ஆர்
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது என்று கூறி வந்தனர். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்பது உண்மைக்கு மாறானதாகும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மின்சாரத்துறைக்கு கூடுதலாக ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். வேளாண் இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரத்திற்கான மானியத்திற்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி ஆகியோர் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறி வந்த நிலையில் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது என்று தற்போது பி.டி.ஆர் கூறி இருப்பது சமுக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications