"டாப் 2".. இது வேறயா.. தமிழ்நாட்டுக்கே ஹேப்பி.. பத்திர பதிவுத்துறை செயலாளர் சொன்ன விஷயம்.. அட அருமை
சென்னை: பெண்களை மதிக்க வீடுகளில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தமிழக பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அறிவுறுத்தியிருக்கிறார். மகளிர் தின நாளில் பதிவுத்துறை செயலாளரின் இந்த வேண்டுகோள், பலரையும் ஈர்த்து வருகிறது.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

அந்தவகையில், நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.. தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், தமிழகத்தில் திமுக அரசு பெண்களுக்கு செய்துள்ள பல்வேறு சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.
திட்டங்கள்: குறிப்பாக, "புதுமைப் பெண்" திட்டம் தொடங்கி, கல்லூரிக்கு மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர், சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும், நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு 50 சதவீதம் வேலைவாய்ப்பு, புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உட்பட தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை கூறியிருக்கிறார்.
மேலும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளை (50 சதவீதத்துக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் மேயர்களாக செயலாற்றும் நிலையை திமுக ஏற்படுத்தி இருப்பதாகவும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஒதுக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணை தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் உள்ளது சாதனை என்றும் முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
பயணம் தொடரும்: அதுமட்டுமல்ல, இந்த வருடம் பிப்ரவரி 21ம் நாள், மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024"ஐ வெளியிட்டதாகவும், சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று தமிழக பதிவுத்துறை செயலாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கம்: சென்னை எத்திராஜ் கல்லூரி பவளவிழாவை முன்னிட்டு "நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு" குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.. இதில், எத்திராஜ் கல்லூரி முன்னாள் மாணவியும், பரதநாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியனுக்கு "சிறப்புமிக்க முன்னாள் மாணவர்" என்ற விருதை தமிழக பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, மருத்துவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பேசும்போது, "நாட்டில் அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், நம்முடைய மாநிலம் 2வது இடத்திற்கு முன்னேற முக்கிய காரணமே இதுதான்.
சிறப்பு: அனைவரையுமே, சிறப்பாக வழி நடத்தும் திறமை பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. தாய்மார்கள் தான் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து மரபுகளை அழியாமல் பாதுகாக்கிறார்கள்... பெண்களை மதிக்க அனைவருக்கும் வீடுகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்" என்கிறார் ஜோதி நிர்மலா சாமி.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications