சென்னைக்கு அருகில் ‘அறிவுசார் நகரம்’.. 872 ஏக்கரில் ஸ்டாலின் பிரமாண்ட பிளான்! மாணவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: 872 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உதயமாகப்போகும் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' (Tamil Nadu Knowledge City) தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக அமையப்போகிறது.
உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அறிவுசார்ந்த ஒரு சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டை அறிவுசார் சிறப்பிற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026 (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா செங்காத்துகுளம், மேல்மாளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் அமையவுள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சுமார் 872 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்கப்படுகிறது. இந்த நகரம், தனித்தனி நிறுவனங்களின் தொகுப்பாக இல்லாமல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி ஒன்றிணையும் ஒரு ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இருக்கும். வரும் ஆண்டுகளில், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் புத்தாக்கக் குழுக்களுடன் இணைந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பவர்களை இது உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிலையங்கள், பணிகளுக்குத் தேவையான ஸ்கில் டெவலப்மெண்ட் அளிக்கும் மையங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும். இந்த அறிவுசார் நகரம் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், உயர்தரக் கல்வியும் கிடைக்கும் என அரசு கூறுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் மட்டுமல்லாமல் எல்லா துறை மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த அறிவுசார் நகரம் அமைகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகத்தை ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவது இந்த அறிவுசார் நகரத்தின் பிரதான நோக்கம். இந்த அறிவுசார் நகரம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒட்டுமொத்த நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கும் என்கிறார்கள்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications