சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வருடத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது! போலீசார் மன அழுத்தத்தை குறைக்க யோகா - டிஜிபி சைலேந்திர பாபு

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டுகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவி வருவதோடு, ரவுடிகள் சுற்றுலா செல்வது போல வலம் வருவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்பது கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்..

 அத்துமீறும் அரசுபள்ளி மாணவர்கள்! நம் கையை நாமே வெட்டுவது போல்உள்ளது! எச்சரித்த டிஜிபி சைலேந்திர பாபு அத்துமீறும் அரசுபள்ளி மாணவர்கள்! நம் கையை நாமே வெட்டுவது போல்உள்ளது! எச்சரித்த டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை புரசைவாக்கத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடமைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சுத்தமல்லி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தனது பணியை சரியாக செய்து உள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் மதுபோதையில் சென்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார்.

குற்றங்கள் குறைந்துள்ளது.

குற்றங்கள் குறைந்துள்ளது.

இந்த நிலையில் மார்க்ரெட் தெரசா, கோவில் கொடை விழா பாதுகாப்பு பணிக்கு சென்றபோது, ஆறுமுகம் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார். அப்போது, மார்க்ரெட் தெரசா திறம்பட செயல்பட்டு, தன்னை காத்துக் கொண்டதுடன், ஆறுமுகத்தையும் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். கத்தியால் குத்திய ஆறுமுகத்தின் கை முறிந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது.

பழிக்குப் பழி கொலைகள்

பழிக்குப் பழி கொலைகள்

மேலும் தென் மாவட்டங்களில் நடைபெறும் பழிக்குப்பழி வாங்கும் கொலைகளும் குறைந்து உள்ளது. கஞ்சா, புகையிலை மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்து உள்ளது. அதற்கு அத்தகைய வழக்குகளை போலீசார் அதிகம் பதிவு செய்வதே காரணம். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்து, நல்லுறவை பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போலீசாருக்கு யோகா

போலீசாருக்கு யோகா

அனைத்து போலீஸ் நிலையங்கள் முன் வரவேற்பு அதிகாரியை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவர் பொதுமக்களை வரவேற்று குறைகளை கேட்கும் வகையில் செயல்படுவார். மேலும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க வாரந்தோறும் யோகா, உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை அவசர தேவை இல்லாத காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது", என தெரிவித்தார்.

English summary
Tamil Nadu Law and Order DGP Sylendra Babu has said that the crime rate in Tamil Nadu has come down and the number of murders has come down to 80 this year as compared to last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X