Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதச்சார்பற்ற தலைவர்! முலாயம் சிங் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக தலைவர்கள் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சமாஜ்வாதி கட்சி தொடங்குவதற்கு முன்னரே அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் முலாயம் சிங். தற்போது அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

அதன் பின்னர் 1974ல் மீண்டும் ஒரு முறை, 1977ல் மூன்றாவது முறை என தொடர்ந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், 1975ல் நெருக்கடி நிலையை எதிர்த்து குரல் கொடுத்ததன் காரணமாக வீட்டுச் சிறை வாசத்திற்கும் ஆளானார். இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் இடதுசாரி தலைவர்களுடன் இவருடைய நட்பு தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதனையடுத்து லோக்தளம் கட்சி சார்பில் அம்மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் கட்சி விரைவில் இரண்டாக உடைந்தது.

முதலமைச்சர்

முதலமைச்சர்

இதை எதிர்பாராத அவர் கிராந்திகாரி மோர்ச்சா எனும் கட்சியை தொடங்கி 1989ம் ஆண்டு அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனையடுத்து 1992ல் சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டே காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆதரவுடன் இரண்டாவது முறையாக அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆக இப்படியாக 10 முறை எம்எல்ஏ, ஒரு முறை எம்எல்சி, 7 முறை மக்களவை எம்பி என தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.

மதச்சார்பற்ற கொள்கை

மதச்சார்பற்ற கொள்கை

கடைசி வரை தான் பயின்ற சோசலிச கொள்கையை அவர் முழுமையாக கைவிடவில்லை. எப்போதெல்லாம் ஆட்சிக்கு நெருக்கடி நேர்கிறதோ அப்போதெல்லாம் அவர் இந்த கொள்கையை கடைப்பிடித்தார். இவ்வாறு இருக்கையில் சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,

இரங்கல்

இரங்கல்

"ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கான போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் முலாயம் சிங். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இறுதி சடங்கில் திமுக சார்பில், கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துவார்." என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில், "உத்தரப் பிரதேச மாநிலத்தின் நலனுக்காகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் முலாயம் சிங் ஆற்றிய பணிகளின் சேவை என்றென்றும் மனதில் நிற்கும். அவரை இழந்து வாடும் அகிலேஷ் யாதவ் மற்றும் சாமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முலாயம் சிங் முழுமையான ஆதரவை வழங்கியவர்.

ராமதாஸ்

ராமதாஸ்

கடந்த 2000ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க முன்மொழிந்தவர். எனது 33 ஆண்டுக்கால சமூகநீதி தோழன். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து வைகோ, "1975ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 மாதங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு தியாக சரித்திரம் படைத்தார்.

உரிமைக்காக போராடியவர்

உரிமைக்காக போராடியவர்

பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும்,ஜனநாயக நெறிமுறைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட முலாயம் சிங் யாதவ் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் குடும்பத்தினருக்கும், அவரது கட்சி தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்.

சமூக நீதியின் தூணாக திகழ்ந்த அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் யாதவுக்கும், சமாஜ்வாதி கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார்.

முத்தரசன்

முத்தரசன்

முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத்தை தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர், சோசலிச சிந்தனையாளர் ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயணன் போன்றவர்களின் வழிநின்று பொது வாழ்வில் ஈடுபட்டவர். சமூக சீர்திருத்த கொள்கைகளில் முற்போக்கு கண்ணோட்டம் கொண்டவர்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டும் தலைவராக செயல்பட்டு வந்த முலாயம் சிங் யாதவ், வகுப்புவாத சக்திகளின் தீவிரத் தாக்குதலை எதிர்கொள்ளும் நேரத்தில் காலமானது ஜனநாயக இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரனும் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது குறித்து அவர் எழுதியுள்ளதாவது, "நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். பல்வேறு பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+