3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
சென்னை: வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் 16-ம் தேதி புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே குறைந்தது 5 நாட்களுக்காவது சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

கலைவாணர் அரங்கம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி விவாதிக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

7 அல்லது 5 நாட்கள்
இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 3 நாட்களில் ஒரு நாள் மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும்.

எதை பேசுவது
எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் எதை பற்றி பேச முடியும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசவேண்டும், கல்விக்கொள்கை குறித்து பேச வேண்டும், கொரோனா பாதிப்பு பற்றி பேசவேண்டும். இப்படி இன்னும் பல முக்கிய விவகாரங்கள் பற்றி பேச வேண்டியது இருப்பதால் அவையை 7 நாட்களுக்கு நடத்தலாம் எனக் கூறினேன். சபாநாயகர் முடியாது எனக் கூறிவிட்டதால் 5 நாட்களுக்காவது நடத்தலாம் எனத் தெரிவித்தேன். ஆனால் அதற்கும் மறுத்துவிட்டார்.

எதற்கு அழைத்தார்கள்?
எங்கள் கோரிக்கையை செவிமடுக்கவே இல்லை, சும்மா ஒப்புக்கு எங்களை அழைத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி ஏற்கனவே எடுத்த முடிவை வெளியிடுகிறார் சபாநாயகர் எனத் தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், சட்டமன்றம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடும் என்றும் கேள்வி நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications