ஜூன் 24ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்.. தேதி குறித்த சபாநாயகர் அப்பாவு.. எத்தனை நாட்கள் நடக்கும்?
சென்னை : ஜூன் 24ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க தொடங்கிய போது, சட்டப்பேரவை தொடங்கும் முன்பும், முடியும் போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இருந்ததாகவும் கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்துவிட்டார். இதன்பின் சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை வாசித்து முடித்தார். இதன் அடுத்த நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2024 -2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பொது விவாதம் நடைபெற்று முடிந்தது. ஆனால் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கவில்லை. ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.
அன்றைய தினம் முதல் எத்தனை நாட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க வேண்டும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதனை ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பாகவே ஒரு தேதியில் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் 25 நாட்களுக்கு மேல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications