Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி எல்எல்ஆர் ஈசியாக போடலாம்.. வந்துவிட்டது இ சேவை பிரிவு.. ஆர்டிஓ ஆபிஸ் போக வேண்டியதே இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல் இ-சேவை மையங்களில் LLR பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் இதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் எளிமையாக இன்று முதல் எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக நேரில் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை.

Tamil Nadu LLR can be applied through online New rule comes into effect

இ சேவை மையம் சென்று அங்கே எளிதாக எல்எல் ஆர் போடலாம். மோட்டார் வாகனத்துறையின் இதர சேவைகளுக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க விரைவில் வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை எளிதாக மேற்கொள்ள முடியும். எல்எல்ஆர் விண்ணப்பிக்க நாள் முழுக்க காத்திருக்க வேண்டியது இல்லை.

எல்.எல்.ஆர். பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமம் கருதி இந்த வசதி கொண்டு வரப்பட்டு உள்ளதாம்.

லைசன்ஸ் ஆன்லைன்: இந்தியாவில் அதிக வாகனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ள நிலையில் இரண்டாவதாக தமிழ்நாட்டில் அதிக அளவில் வாகனங்கள் உள்ளன. அரசு பேருந்துகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலில் உள்ளது. தமிழர்கள் பொதுவாகவே வாகன பிரியர்கள்.

இதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டில் புதிய வாகனங்களின் விற்பனைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையிலும் அதிக அளவில் வாகன உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் ஆர்டிஓ அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

புதிய லைசன்ஸ் வாங்குவது, லைசன்ஸ் புதுப்பிப்பது, லைசன்சில் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்வது என்று பல காரணங்களுக்காக மக்கள் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் இதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதோடு லாக்டவுன் சமயத்தில் பலர் புதிய லைசன்ஸ் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில்தான் இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியான நிலையில் தமிழக அரசு இதை உறுதி செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியும்.

பழகுனர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் (லைசன்ஸ்), ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். அதேபோல் ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டிடம் மதுரை மாவட்டம் (மதுரை தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு என்று தனியாக அமைக்கப்படும். இந்த கட்டிடம் ரூ.528 லட்சம் செலவில் கட்டப்படும். பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+