கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படி வாக்களிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது

மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த முறை தமிழகத்தில் பல முனை போட்டிகள் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக, பாமக, பாஜக இந்த முறை தனித்தனியாகக் களமிறங்குகிறது. இவை தவிர தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், கொரோனா நோயாளிகள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சான்றிதழைக் காட்டி வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் பிபிஇ உடைகளை அணிந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் அலுவலர்களும் மாலை 5-6 வரை பிபிஇ உடைகளை அணிந்து, கொரோனா நோயாளிகளிடம் இருந்து வாக்குகளைப் பெறுவார்கள். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் சமயத்திலும் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications