நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது. இன்று பதிவான வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்றைய வாக்குப் பதிவில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் சில சர்ச்சைகளுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

தமிழகத்தில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது
மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன
நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு
வாக்கு பதிவு நிலவரம் குறித்து தமிழக மாநில தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக முடிந்தது - டிஜிபி சைலேந்திரபாபு
சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்யப்பட்டது
கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாக பேட்டி
சில நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - டிஜிபி
READ MORE












Click it and Unblock the Notifications