தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காதாம்.. காரணம் இதுதான் மக்களே
தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரைக்கும் மாநிலம் முழுதும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களை, தமிழ்நாடு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிவிக்கப்படாத மின்தடை... அறிவிக்கப்பட்ட மின் வெட்டு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவ்வப்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில், காலை முதல் மாலை வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த விபரம், மின் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
மின்சார பிரச்சினை வெற்றிக்கு பாதிப்பை ஏற்படத்தக்கூடாது என்று ஆளும் திமுக அரசு நினைக்கிறது. இதனால், மாநிலம் முழுதும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களை மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக தேர்தல் முடியும் வரை, மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின் தடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
அறிவிக்கப்படாத மின் தடை பற்றிய புகார்களுக்கு 1912 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அதுமட்டுமின்றி 9445850811 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 044-28521109, 044-28524422 என்ற தரைவழி எண்களிலும் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications