இலையை மென்று விழுங்கிய தாமரை! அதிமுகவிற்கு பெரிய ஆபத்து.. தூக்கி சாப்பிட்ட பாஜக! இதை கவனிச்சீங்களா!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதில் பரிதாபாத்திற்கு உரிய விஷயம் என்றால் அது பாஜக சில வார்டுகளில் அதிமுகவையே தூக்கி சாப்பிட்டு உள்ளது. அதிமுக சுதாரிக்க வேண்டிய தருணம் இதுதான் என்று இந்த தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான தோல்வியை அதிமுக இந்த முறை சந்தித்துள்ளது/. பொதுவாக ஆளும் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றாலும் எதிர்க்கட்சிகள் இவ்வளவு மோசமான தோல்வியை தழுவியது இல்லை.

மோசமான தோல்வி
ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக சென்னையில் படுதோல்வி. கோவை, சேலம் போன்ற பாரம்பரியமாக அதிமுக வலுவாக இருக்கும் மாவட்டங்களிலும் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் அதிமுக சுத்தமாக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் டெல்டாவில் மோசமான தோல்வியை தழுவி அதிமுக இந்த முறை பாதாளத்திற்கு சென்றுள்ளது.

பாஜக
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக கொஞ்சம் சுமாரான வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக பெற்ற இடங்கள் என்று பார்த்தால் 22 மாநகராட்சி வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 56 நகராட்சி வார்டுகளை பாஜக வென்றுள்ளது. மேலும் 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது. மாநகராட்சியில் மொத்தமாக பாஜக 1.60 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. நகராட்சியில் பாஜக 1.46 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. மொத்தமாக பாஜக 3.26 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது.

வாக்குகள் வித்தியாசம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சென்னை மெட்ரோவில் பல இடங்களில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 9 வார்டுகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னையில் 134வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றிபெற்று இருக்கிறார். 50க்கும் அதிகமான வார்டுகளில் அதிமுகவை விட திமுக 10 ஆயிரம் வாக்குகள் எல்லாம் வித்தியாசம் பெற்று வென்றுள்ளது. மாநகராட்சிகளில் இவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது மிக மிக அதிகம்.

தோல்வி
அந்த அளவுக்கு சென்னையில் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் அதிமுக 15 வார்டுகளை மட்டுமே வென்றுள்ளது. முன்னாள் ஆளும் கட்சி இவ்வளவு மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது. முக்கியமாக சென்னையில் 12 வார்டுகளில் பாஜக மூன்றாம் இடம் வந்துள்ளது. இங்கு பாஜக அதிமுக இடையிலான வேறு 2000க்கும் கீழ். இதனால் பாஜக அதிமுகவை வேகமாக பின்னுக்கு தள்ளி வருவது உறுதியாகிறது. அதிலும் ஹார்பர் பகுதி, தென் சென்னையில் அதிமுக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது.

மாம்பலம்
மேலும் மாம்பலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள், அண்ணா நகர், அடையார், வேளச்சேரி, தி நகர் போன்ற நகர்ப்புற பகுதிகளில் பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகளை சில வார்டுகளில் வாங்கி உள்ளது. எலைட் எனப்படும் வசதி படைத்த மக்கள் வாழும் பகுதிகளில் திமுக வென்று உள்ளது. இந்த மக்கள் இரண்டாவது இடத்திற்கு அதிமுகவை விட பாஜகவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இங்கெல்லாம் அதிமுகவின் இலையை பாஜகவின் தாமரை மென்று விழுங்கி உள்ளது.

அதிமுகவை கண்டுகொள்ளாத சென்னை
எலைட் சென்னை பகுதி மக்கள் பெரும்பாலும் அதிமுகவை கண்டுகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்கு முன் ஜெயலலிதா இருந்த போது அவரிடம் ஒரு கார்ப்ரேட் ஆதரவு மனப்பான்மை கொஞ்சம் இருந்தது. இதனால் கார்ப்ரேட் ஆதரவு மக்கள், வலதுசாரிகள் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்தனர். அதோடு ஜெயலலிதாவிற்கு எளிய மக்களின் ஆதரவும் இருந்தது. இது போக லேசான இந்துத்துவா சாயமும் அவரிடம் இருந்தது.

வசீகர தலைவர்கள் இல்லை
ஆனால் அதிமுகவில் இப்போது அப்படி தலைவர்கள் இல்லை. சென்னையில் அதிமுகவின் முகம் என்றால் ஜெயக்குமார்தான் என்ற நிலை உள்ளது. அவரை தவிர்த்து அதிமுக முகங்கள் எல்லாம் கொங்கு மைந்தர்கள். அவர்களிடம் இந்த எலைட் தோற்றமோ, கார்ப்ரேட் சாயலோ இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்த அந்த வசீகரம் இவர்களிடம் இல்லாததால் திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் பாஜகவிற்கு சென்றுள்ளது. அதாவது திமுகவிற்கு மாற்றாக சென்னையில் பல வார்டு மக்கள் பாஜகவை பார்த்து உள்ளனர்... அதிமுகவை அல்ல! இது அதிமுகவிற்கு ஆபத்தான் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Recommended Video

அதிமுகவை விழுங்கும் பாஜக
இந்திய அரசியலை எடுத்துக்கொண்டால் பொதுவாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக வளரும். அதன்பின் மாநில கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு பாஜக இரண்டாவது பெரிய கட்சியாகும். பீகாரில் நிதிஷ் குமார், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிற்கு இதுதான் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் இதே நிலை கேசிஆருக்கு ஏற்படும் முன் அவர் சுதாரித்துக்கொண்டார். தற்போது அதே அரசியல் மாற்றம் பாஜக மூலம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியின் வாக்குகளை பாஜக கைப்பற்ற தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications