6 காரணங்கள்.. 4 விறுவிறு மாற்றங்கள்.. ஸ்டாலின் கைக்கு போன "பேப்பர்".. கச்சேரியை தொடங்கும் திமுக!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் திமுக முக்கியமான சில மாற்றங்களை கட்சி, ஆட்சி ரீதியாக செய்ய போவதாக தகவல்கள் வந்துள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
மொத்தமாக 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. மார்ச் 4ம் தேதி நடக்க உள்ள மறைமுக தேர்தலில் பெரும்பாலும் 21 மாநகராட்சியிலும் திமுக மேயர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

மாற்றங்கள் என்ன?
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வெற்றிக்கு பின் திமுக முக்கியமான 4 மாற்றங்களை கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் செய்ய போவதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் நடக்க போகும் மாற்றங்கள் குறித்து பார்க்கும் திமுகவின் வெற்றிக்கு அக்கட்சி காரணமாக பார்க்கும் 6 விஷயங்களை பார்க்கலாம்.
காரணம் 1 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிராக அதிருப்தி அலைகள் இல்லை. பெரிய அளவில் எங்குமே திமுகவிற்கு எதிராக பெரிதாக அதிருப்தி அலைகள் இல்லை. இதனால் அதிமுகவிற்கு குற்றச்சாட்டு வைக்க பெரிய காரணங்கள் இல்லை.
காரணம் 2 - திமுக 8 மாதத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் அரசின் பொருளாதார நிலை சரி இல்லை என்பதை பல மேடைகளில் திமுக தெரிவித்து வந்தது. இதனால் குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்காதது பெரிய பிரச்சனையாக வெடிக்கவில்லை.

காரணங்கள் என்ன?
காரணம் 3 - உட்கட்சி பூசல் இல்லை என்பது திமுகவிற்கு கொஞ்சம் சாதகமாக அமைந்தது. அதிமுகவில் அன்வர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம், சசிகலா பேக்டர் போன்ற விஷயங்கள் இருந்தது. ஆனால் திமுகவில் அமைச்சர் பிடிஆர் கட்சி பதவி ராஜினாமா தவிர கட்சிக்குள் பெரிய விஷயம் எதுவும் நடக்காமல் சுமுகமாகவே இருந்தது.
காரணம் 4 - கூட்டணி பூசல் இல்லை என்பதும் திமுகவிற்கு இன்னொரு சாதகம். கரூரில் செந்தில் பாலாஜி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மோதல் தவிர மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் திமுக கூட்டணி வலுவாக இருந்தது. சில மாவட்டங்களில் சில வார்டுகள் மட்டும் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மற்றபடி அதிமுக - பாஜக பிரிவு போல கூட்டணியில் எந்த விதமான மோதலும் இல்லை.
காரணம் 5 - இது போக மாநில அளவில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை குட்மார்க்தான் வாங்கி இருக்கிறார். மக்களை அடிக்கடி நேரில் சந்திப்பது. மக்களிடம் எளிமையாக பழகியது. மழை, வெள்ள காலத்தில் களத்தில் இருந்து உதவிகளை செய்தது. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளால் முதல்வர் ஸ்டாலின்

வெற்றி எப்படி?
காரணம் 6 - இது போக தேசிய அளவில் திமுக கவனம் பெற தொடங்கி உள்ளது. இது சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளில் பொருளாதார ரீதியாக முன்னேறி மக்கள் இடையே திமுகவிற்கான வரவேற்பை பெற காரணமாக இருந்தது. அதிமுகவிடம் இந்த தேசிய அளவிலான பிரபலம் ஜெயலலிதா மரணத்திற்கு பின் இல்லை. சென்னை, கோவை போன்றவற்றை திமுக கைப்பற்ற இதுவும் ஒரு காரணம்.
இந்த நிலையில்தான் வெற்றியை தொடர்ந்து பின்வரும் முக்கியமான மாற்றங்களை திமுக வரும் நாட்களில் செய்ய உள்ளது.

மாற்றங்கள்
மாற்றம் 1 - முதல் விஷயம் கட்சி ரீதியாக சில மாற்றங்கள். நன்றாக செயலாற்றிய நிர்வாகிகளுக்கு கட்சி ரீதியாக பொறுப்புகள். பல நிர்வாகிகள் மேயர், சேர்மேன்கள் ஆக உள்ளதால் புதிய கட்சி நிர்வாகிகள் நியமனம் போன்ற அறிவிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.
மாற்றம் 2 - அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக விரைவில் நடக்கும் என்று கூறுகிறார்கள். சில அமைச்சர்கள் மட்டும் கொஞ்சம் சரியாக வேலை செய்யவில்லை. அவர்களுக்கான மெமோ விரைவில் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ரிப்போர்ட் பேப்பர் ஒன்று முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்
மாற்றம் 3 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சில வாக்குறுதிகள் மட்டும் விவாதங்களை ஏற்படுத்தியது. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம், கேஸ் விலை குறைப்பு போன்ற திட்டங்கள் விவாதம் ஆனது. இந்த திட்டங்கள் வரும் நாட்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும், இந்த பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.கூறப்படுகிறது.
மாற்றம் 4 - திமுக நிர்வாகிகள் சிலர் மீது வந்த புகார்கள் மீது ஆக்சன் எடுக்கப்பட உள்ளது. சில நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாக இயங்கியதாகவும், சிலர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாகவும் புகார்கள் சென்றுள்ளதாம். திமுக தலைமை இதற்கான களையெடுப்பை வரும் நாட்களில் செய்யும்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications