டிக் அடித்த ஸ்டாலின்! அவங்களுக்கு மட்டும் பறந்த "லெட்டர்".. இன்று பதவி ஏற்ற கவுன்சிலர்ஸ்! பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இதில் வெற்றிபெற்றவர்கள் இன்று காலை பதவி ஏற்றனர். நாளை மறுநாள் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று இவர்கள் பதவி ஏற்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 22ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.
அதேபோல் நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகளிலும் திமுகதான் பெரும்பான்மை பெற்றுள்ளது. 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.

வெற்றி
திமுக தரப்பு இந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியை கூட வெல்லவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது. கடந்த 26 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய தோல்வியை அக்கட்சி உள்ளாட்சி தேர்தலில் பெற்று இருக்கிறது. இது அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எத்தனை பதவிகள்
மொத்தமாக தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மாநகராட்சியில் மட்டும் 1,373 வார்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் மேயர் பதவி ஏற்பு நடக்கவில்லை.

பதவி ஏற்பு
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இதில் வெற்றிபெற்றவர்கள் இன்று காலை பதவி ஏற்றனர். நாளை மறுநாள் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று இவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், கமிஷனர்கள் முன்னிலையில் இன்று காலை அவர்கள் இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

எப்படி செய்வார்கள்
இந்த கவுன்சிலர்கள் எல்லோரும் தனி தனியாக நிற்க வைத்து பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மொத்தம் ஒவ்வொரு வார்டு கவுன்சிலரும் 35 வினாடிகள் மட்டுமே உறுதிமொழியை எடுத்தனர். தமிழ்நாட்டில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் இந்த தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக தரப்பு 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. இதில் எத்தனை மாநகராட்சி பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

யார்
திமுக சார்பாக மேயர் பதவிகளை வகிக்க போகும் நபர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் சார்பாக ஏற்கனவே மறைமுக தேர்தலில் போட்டியிட போகும் நிர்வாகிகளுக்கு லெட்டர் சென்றுவிட்டது. இந்த லெட்டர் சென்ற நிர்வாகிகள் மட்டுமே மறைமுக தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் ஸ்டாலின் டிக் அடித்த நபர்களுக்கு லெட்டர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மறைமுக தேர்தல் இப்போதே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications