ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
சென்னை : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட தற்போது குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வாக்களிக்க விடுமுறை அளிக்கப்பட்டபோதும் கோடை வெயில், வெளியூர் பயணம் உள்ளிட்ட காரணங்களால் சென்னைவாசிகள் வாக்களிப்பதை தவிர்த்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது நேற்று தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

கடுமையான கோடை வெயிலுக்கு இடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்த நிலையில் தமிழகத்தில் சுமார் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வாக்குப் பதிவு: இதனையடுத்து வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 கட்ட தேர்தல் இருக்கும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் எண்ணப்பட்ட இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன இந்த நிலையில் வழக்கம் போல சென்னையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.
சென்னையில் சரிவு: கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் நான்கு சதவீத வாக்குகள் சரிந்து இருக்கின்றன. தென்சென்னை தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 59.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 54.27 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
தொகுதி வாரியாக: இதேபோல மத்திய சென்னையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 60.7% வாக்குகள் பதிவான நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 53.91% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன இதேபோல வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் 67.2% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் 60.13 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. மூன்று தொகுதிகளிலுமே கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மிகக் கடுமையாக சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வம் காட்டவில்லை: தமிழகத்தின் மிகப் பெரிய நகரும், தலைநகருமான சென்னையில் தான் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கடுமையான கோடை வெப்பம் கொளுத்தி வந்து நிலையில் சென்னை மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க பெரிய அளவிலான ஆர்வம் காட்டாதது வாக்குப்பதிவு சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் வசித்து வந்த பலரும் சொந்த ஊர்களில் வாக்களிக்க சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
விடுமுறை அறிவிப்பு: சென்னையில் இருப்பவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தலைமை தேர்தல் ஆணையமும் விடுமுறை அறிவித்திருந்தது. தேர்தலில் வாக்களிக்க விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சாப்ட்வேர் கம்பெனிகள் என அனைத்திற்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது, விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தும் கூட சென்னை மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதிர்ச்சி: தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் கிராமப்புறங்களில் கூட வயதானவர்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னையில் வாக்கு சதவீதம் ஆண்டுகளுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் காலங்களில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டினால் மட்டுமே அது சாத்தியப்படும் என்கின்றனர்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
கழகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய சுயேச்சைகள்! 2021 சட்டமன்ற தேர்தல்.. டாப் 10 இவுங்கதான்.. ரிவைண்ட்












Click it and Unblock the Notifications