மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், லாரி வாடகைக் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் எதிரொலியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் 6.5 லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் மூலமாகவே உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான சரக்குகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Diese Tamil Nadu

இந்த சூழலில், நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாடகை கட்டணத்த்தை 25 சதவீதம் உயர்த்த உள்ளனர்.

டீசல் விலை

கடந்த சில மாதங்களாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மட்டும் லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, டயர், எஞ்சின் உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்தச் செலவுகளை தற்போதைய வாடகை கட்டணத்தில் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

லாரி வாடகை உயர்வு

இதனால் தொழிலை தொடர்வதற்காக கட்டண உயர்வு தவிர வேறு வழியில்லை என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக லாரிகளில் ஒரு டன் சரக்குக்கு சுமார் 1,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 25 டன் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிக்கு மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. புதிய உயர்வின் மூலம் இந்த கட்டணம் சுமார் 31 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது ஒரு லாரிக்கு கூடுதலாக 6 ஆயிரம் ரூபாய் வரை செலவு அதிகரிக்கும்.

போக்குவரத்து செலவு

அதேபோல், நாமக்கல் - மதுரை : டன்னுக்கு 750 ரூபாயில் இருந்து சுமார் 940 ரூபாய், நாமக்கல் - கோவை : டன்னுக்கு 750 ரூபாயில் இருந்து 940 ரூபாய், நாமக்கல் - தூத்துக்குடி : 1,200 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய், நாமக்கல் - ஓசூர் : 900 ரூபாயில் இருந்து 1,125 ரூபாய், நாமக்கல் - ஈரோடு : 500 ரூபாயில் இருந்து 625 ரூபாயாக உயரக்கூடும். மேலும், கிலோமீட்டர் அடிப்படையிலான கட்டணமும் உயரும். டிப்பர் லாரிகளுக்கு தற்போது கிலோமீட்டருக்கு 10 முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. புதிய உயர்வுக்குப் பிறகு இது 12 முதல் 30 ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் விலை

இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தற்போது 20 முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலையில், அது 23 முதல் 60 ரூபாய் வரை உயரலாம். அதேபோல், கன்டெய்னர் லாரிகளுக்கான கட்டணம் தற்போது கிலோமீட்டருக்கு 35 முதல் 85 ரூபாய் வரை உள்ள நிலையில், அது 50 முதல் 110 ரூபாய் வரை உயரக்கூடும் என போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர். லாரி வாடகை உயர்வின் நேரடி தாக்கம் சந்தைகளில் தெரியும் என வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், சிமெண்ட், இரும்பு, மணல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+