”மீண்டும் முககவசம்”ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! கவனமா இருக்கனும்! ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
சென்னை : மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக மருத்துவத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாத இறுதியில் மிக உச்சத்தில் இருந்த பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் சரிவைச் சந்திக்கத் தொடங்கி நாளொன்றுக்கு 20 முதல் 25க்குள் என்ற அளவிலேயே இருந்தது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் சில நாட்களாக ஒருவருக்குக் கூட பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது மிகச்சிறிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் 25 என்ற கணக்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது 30 என்ற அளவில் சிறிய அளவிலேயே பாதிப்பு உள்ளது. இந்நிலையில், இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை
இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்," "தில்லி, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதியவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் போன்றவற்றை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications