கலைஞருக்கு மூத்தபிள்ளை.. மு.க.ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை! யார் தெரியுமா? உதயநிதி சொன்ன சீக்ரெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபாலபுரத்தில் உருவான திமுக இளைஞரணி, தற்போது 44ஆண்டுகளைக் கடந்து 45வது ஆண்டை தொடரும் நிலையில், திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு மூத்தப்பிள்ளை முரசொலி எனவும், கழகத் தலைவர் ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை நம் இளைஞரணி என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Udhayanidhi Stalin DMK Mk Stalin

கோபாலபுரத்தில் உள்ள ஒரு முடி திருத்தகத்தில் இன்றைய கழகத்தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க'தான் 1980-இல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞர் அணி என்னும் அதிகாரப்பூர்வ அணியாக மாறியது.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையடுத்து திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி.. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்! கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்." என கூறியுள்ளார்.

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞருக்கு மூத்தப்பிள்ளை முரசொலி எனவும், கழகத் தலைவர் ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை நம் இளைஞரணி என தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"முத்தமிழறிஞருக்கு மூத்தப்பிள்ளை முரசொலி! கழகத்தலைவருக்கு செல்லப்பிள்ளை நம் இளைஞரணி! 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக இளைஞரணியை, வாழ்த்தியும் - பாராட்டியும் உத்வேகமளித்துள்ள இளைஞரணியின் தாய், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் என நம் தலைவர்கள் காட்டிய பாதையில், கழக கொள்கைகளையும் , வரலாற்றையும் தமிழ்நாட்டின் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கின்ற அரும்பணியை கழக இளைஞர் அணி என்றும் தொய்வின்றி தொடரும். கொள்கை தீரமிக்க இளைஞர் படையை உருவாக்கிட, கழகத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை தலைமேற்கொண்டு காரியமாற்றுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கழகமே வென்றிட அயராது உழைத்திடுவோம்.:" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+