முக்கிய மீட்டிங்! சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்த இரு தமிழக அமைச்சர்கள்! என்ன காரணம்
சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.
கடந்த செப். மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது.
அண்டை மாநிலமான கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆளும் தரப்பிற்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது.

திமுக
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கூட திமுகவினர் பேசி உள்ளனர். தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் அல்லது உடனடியாக அவரை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக எம்பிகள் வலியுறுத்தினர்.

அமைச்சர்கள் சந்திப்பு
இரு தரப்புக்கும் இடையே இருக்கும் பூசல் என்பது பல மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவி உடன் தமிழக அமைச்சர்கள் திடீரென சந்தித்து உள்ளனர். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் கவர்னர் ரவியை சந்தித்தனர்.

இது தான் காரணம்
அதேபோல நீட் விலக்கு தொடங்கி பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ளது. தமிழக அரசின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கும் வகையில் உள்ளதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் நீட் விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவே ஆளுநர் ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

நீட் தீர்மானம்
முதலில் தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதில் சுமார் 6 மாதங்களுக்கு எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த நிலையில், கடந்த பிப். மாதம் அதைத் தமிழக அரசுக்கே திரும்பி அனுப்பினார். இதையடுத்து கடந்த பிப். மாதம் நீட் விலக்கு தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications