மீனவர் தாக்குதலை தடுக்கலை..மதுரை எய்ம்ஸ் அடுத்த "செங்கல்" வைக்கலை.. மோடியை விளாசிய உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை அத்தகைய தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

லோக்சபா தேர்தல் களத்தில் திடீரென கச்சத்தீவு விவகாரத்தை பாஜகவும் பிரதமர் மோடியும் கிளப்பி உள்ளனர். கச்சத்தீவு பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tamil Nadu Minister Udhayanidhi Stalin dares PM Modi on Katchatheevu

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: இதேபோல தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

வாக்குறுதி எங்கே?: தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல் என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?. 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?

வல்லரசு ஆக்கலையே..: இந்தியாவை 2020-ல் இந்தியா வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?. கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்ளே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?.

மதுரை எய்ம்ஸ் செங்கல் எப்போ?: ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?. அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

மீனவருக்காக பேச்சுவார்த்தை?: அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்? கடந்த 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?

செத்த மொழிக்கு ரூ1074 கோடி: வாழும் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு? .நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+