வாயை பிளக்கும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா! அடித்து ஆடிய தமிழ்நாடு! ஃபோகசை திருப்பிய உலக நாடுகள்
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்து தொடர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அதிக அளவில் சென்னையை நோக்கி வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டின் தொழில்துறை, முதலீடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா இது பற்றி கூறுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் சிறந்த கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும் நிர்வாகத்தின் காரணமாக, உதிரி பாகங்கள் உற்பத்தியில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், என்று தெரிவித்து உள்ளார்.

அடித்து ஆடும் தமிழ்நாடு
குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போல அல்லாமல் தமிழ்நாடு இந்த துறையில் அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல ஆப்பிள் சுற்றுச்சூழல் உதிரி பாகங்கள் சப்ளையர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, சுமார் 60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையான மாநில அளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம், மாநிலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தரமான ஆதரவு உறுதி செய்யப்படுகிறது.
2023-ல் பொறுப்பேற்றவுடன், ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதே தனது முதல் முன்னுரிமையாக இருந்தது என்றும், ஓராண்டில் அது வெற்றிகரமாக நிறைவேறியது என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளது. இப்போது நிலைமை மாறிவிட்டது.. 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் சென்றுள்ளதால், அதிக ஆப்பிள் சப்ளையர்கள் எங்களை அணுகுகின்றனர்," என்று Moneycontrol உடனான பிரத்யேக நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாடு மாநிலத்தில் அதிக அளவில் திறன்கள் உள்ளன என்பதை உற்பத்தி நிறுவனங்கள் முக்கியமாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அறிவார்கள். இந்தியாவைப் பற்றி யோசிக்கும்போது தமிழ்நாட்டை பற்றியே அவர்கள் யோசிப்பார்கள. இது ஒரு தனித்துவமான மாநிலம். இங்கு மிக உயர்ந்த தரமான கட்டமைப்பு, திறமையான மனித வளம் மற்றும் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலம் என்பதை அவர்கள் அறிவார்கள்.
ஆப்பிளின் முக்கிய உலகளாவிய சப்ளையர்களில் ஒன்றான ஃபாக்ஸ்கான், ஏற்கனவே தமிழ்நாட்டில் ஐபோன்களை உற்பத்தி செய்து சர்வதேச சந்தைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி விநியோகச் சங்கிலிக்கு தமிழ்நாடு ஒரு மையமாக உருவெடுத்துள்ளது. ஃபாக்ஸ்கானைத் தவிர, பெகட்ரான் (தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் வசமானது), டாடா எலக்ட்ரானிக்ஸ் (இது விரிவான ஐபோன் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையங்களை இயக்குகிறது), மற்றும் ஜபில் போன்ற பெரிய சப்ளையர்களும் இங்கு உள்ளனர். ஜபில் திருச்சியில் ஒரு பெரிய புதிய ஆலையை அமைத்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குவியும் முதலீடு
சால்ட்காம் (சார்ஜர்கள் மற்றும் உதிரி பாகங்கள்), கார்னிங் (ஸ்ரீபெரும்புதூரில் கொரில்லா கிளாஸ்), லிங்யி ஐடெக் (துல்லியமான உதிரி பாகங்கள்) மற்றும் ஆன் செமிகண்டக்டர் ஆகியவை பிற முக்கிய நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூர்-ஓரகடம்-காஞ்சிபுரம் சாலை, ஓசூர் மற்றும் தற்போது திருச்சி பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் மாநில சலுகைகளால் ஆதரிக்கப்படுகின்றன.
2025 நிதியாண்டில் தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவுக்கு $14.65 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.2 சதவீதமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், தற்போதைய $14.6 பில்லியன் மதிப்பிலிருந்து அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் $50 பில்லியன் அளவிற்கு மின்னணு ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம், மின்னணு மதிப்புச் சங்கிலியில் மிகவும் சிக்கலான மற்றும் உயர் மதிப்புள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும், ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியையும் உள்நாட்டில் பூர்த்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications